எந்த வாகனமும் தேவையில்லை” – நாமல் அதிரடி (வீடியோ இணைப்பு)

#SriLanka
Mayoorikka
2 hours ago
எந்த வாகனமும் தேவையில்லை” – நாமல் அதிரடி  (வீடியோ இணைப்பு)

நாட்டிற்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் இல்லை, விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் கொண்டு வரப்படவில்லை. 

ஆனால் 1775 கெப் வாகனங்கள் மட்டும் கொண்டுவரப்பட்டுள்ளன. இதை நினைத்தால் சிரிப்பாகத் தான் உள்ளது. இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 நாட்டில் ட்ரில்லியன் பணம் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ட்ரில்லியன் கணக்கில் இருந்தால் வெங்காம், உருளைக்கிழங்கு, நெல் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காமலிருப்பது ஏன்? நாட்டுக்கு அத்தியாவசியமான மருந்துகள் இல்லை.

 மின்சாரக்கட்டணத்திற்கு சலுகை இல்லை, சிறிய நடுத்தர வர்த்தகர்களைப் பாதுகுாப்பதற்கான வேலைத்திட்டம் இல்லை. இவ்வாறிருக்கையில் ஒரு ட்ரில்லியன் பணம் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 ட்ரில்லியன் பணத்தை வைத்துக்கொண்டு நாட்டிற்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகளை கொண்டுவர முடியவில்லை. விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் கொண்டு வரப்படவில்லை. ஆனால் 1775 கெப் வாகனங்கள் மட்டும் கொண்டுவரப்பட்டுள்ளன. 

இதை நினைத்தால் சிரிப்பாகத் தான் உள்ளது. நீங்கள் அப்போது கூறியவற்றை எல்லாம் நினைத்துப் பார்த்தால் சிரிப்பு தான் வரும் என்று தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!